LATEST NEWS
“8 வருஷம் காதலிச்சுட்டு வேற பொண்ணோட கல்யாணமா..? “காதலன் துரோகம் செய்ததாகக் கூறி விபரீத முடிவு..! காதலியின் சடலத்தை வீட்டின் முன் வைத்து பெற்றோர் போராட்டம்..!!!
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கீர்த்தி என்ற இளம்பெண் மென்பொருள் பொறியாளர், தன் காதலர் தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததால் மும்பையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்தியும், அதே பகுதியைச் சேர்ந்த பாபினேனி சாய் என்ற இளைஞரும் கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். சாய் தற்போது கத்தாரில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வரும் நிலையில், சமூக ஊடகம் மூலமாகத் தொடங்கிய இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது.
சமீபத்தில் சாயின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதையறிந்த கீர்த்தி, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சாயிடம் கேட்டுள்ளார்; ஆனால் சாய் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இரு குடும்பத்தினரும் இப்பிரச்சினை குறித்துப் பேசியும் சாய் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் மிகுந்த மனவேதனையடைந்த கீர்த்தி, கடந்த ஜூலை 14 அன்று தனது பெற்றோருக்கும் காதலர் சாய்க்கும் ஒரே நேரத்தில் போன் கால் செய்து, தன் மரணத்திற்குச் சாய்தான் காரணம் என்று கூறிவிட்டு மும்பையிலுள்ள தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு கீர்த்தியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சாய் கத்தாருக்குத் தப்பிச் சென்றுவிட்டதை அறிந்த கீர்த்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரது உடலை நேராகப் பதனூரில் உள்ள சாயின் வீட்டின் முன்பு வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனது மகளின் தற்கொலைக்குக் காரணமான சாய் நேரில் வந்து இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, கீர்த்தியின் உடல் அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
