CINEMA
ஆபாச விடியோவை வெளியிட்டது அவர் தான்…. நடிகை ஓவியா போலீசில் பரபரப்பு புகார்…!!
தமிழ் சினிமாவில் களவாணி, கலகலப்பு , மெரினா, மூடர்கூடம், மதயானை கூட்டம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை ஓவியா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.படங்களில் நடித்து கிடைத்த பிரபலத்தை விட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். முதன் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்று அறிமுகப்படுத்தியதே நடிகை ஓவியா ரசிகர்கள் தான்.
இவர் பிக் பாஸ் வீட்டில் காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். இந்நிலையில் நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ என்ற பெயரில் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வந்த நிலையில் இந்த ஆபாச வீடியோவை வெளியிட்டது முன்னாள் நண்பர் தாரிஹ் என்று நடிகை ஓவியா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து போலீசில் அவர் புகார் அளித்த அவர், தாரிஹ் என்பவரின் மோசமான நடத்தையை தெரிந்து கொண்டு தான் விலகியதால், அவர் தன்னை பழிவாங்க போலி வீடியோவை அவர் வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.