CINEMA
இந்த ஓட்டம் நின்றுவிட்டால் மூச்சின் ஓட்டமும் நின்று விடும்…. நடிகர் பார்த்திபன் பேட்டி…!!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் பார்த்திபன்.இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் முதல் முதலாக புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் சீதா. முதல் படத்திலேயே பார்த்திபன் மற்றும் சீதா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது. கடந்த 1990 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், நான் பார்க்காத உயரம் இல்லை, வாங்காத விருதுகள் இல்லை. இருப்பினும் இந்த ஓட்டம் எதற்காக என்றால் இந்த ஓட்டம் நின்றுவிட்டால் மூச்சின் ஓட்டமும் நின்று விடும் என்று கூறியுள்ளார்.