LATEST NEWS
” வந்தே பாரத் உணவு மோசம்” என புகாரளித்த பார்த்திபன்…. அதிரடி ஆக்சனில் இறங்கிய ரயில்வே…!!

நடிகர் பார்த்திபன் இரு தினங்களுக்கு முன்பு, வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தபோது கொடுத்த உணவு தரமாக இல்லை. ஆரோக்கிய கேடாக இருப்பதாக பலர் அங்கே முனுமுனுத்தனர். இதனையடுத்து நான் புகார் கொடுத்துள்ளேன். நான் அதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன்பெற வேண்டி தன இந்த புகாரை அளித்தேன் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, இந்த விவகாரமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் தொடர்ச்சியாக, அதிரடியில் இறங்கிய ரயில்வே நிர்வாகம், உணவு தயாரித்த சேலத்தை சேர்ந்த கான்டிராக்டருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது.