“இதை எப்படி கல்லூரி நிர்வாகம் அனுமதித்தது..? போக்சோ வழக்கில் கைதானவர் மீண்டும் கல்லூரி முதல்வர்..! உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி..!! – cinefeeds
Connect with us

CRIME

“இதை எப்படி கல்லூரி நிர்வாகம் அனுமதித்தது..? போக்சோ வழக்கில் கைதானவர் மீண்டும் கல்லூரி முதல்வர்..! உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி..!!

Published

on

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றிய ஜார்ஜ் ஆபிரகாம் என்பவர் மீது கல்லூரி மாணவிக்குக் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவரை, அதே கல்லூரியின் முதல்வராக மீண்டும் நிர்வாகம் பணியில் அமர்த்தியது. இதை எதிர்த்தும், அவரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரியும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவரைப் பணியில் இருந்து நீக்கத் தமிழ்நாடு மகளிர் ஆணையமே பரிந்துரைத்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவி பயிலும் அதே கல்லூரியில் குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் முதல்வராக நியமிக்கப்பட்டிருப்பது மாணவியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், சாட்சிகளை அவர் மிரட்ட வாய்ப்புள்ளது என்றும் வாதிட்டார். போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

Advertisement

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் அதே கல்லூரியில் குற்றம் சாட்டப்பட்டவரை மீண்டும் முதல்வராக நியமிக்கக் கல்லூரி நிர்வாகம் எப்படி அனுமதித்தது எனக் கேள்வி எழுப்பினார். மேலும், அவரை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார். இது குறித்து ஜார்ஜ் ஆபிரகாம் தரப்பு பதிலளிக்கவும், போக்சோ வழக்கு விசாரணை ஏன் இன்னும் தொடங்கப்படவில்லை என்பது பற்றி காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 6-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in