CINEMA
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முழுக்கு போட்ட கமலஹாசன்…. பிரபல டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை…..!!

பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் வருடம் நடைபெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இந்த நிலையில் தற்போது ஏழு சீசன் முடிவடைந்த நிலையில் எட்டாவது சீசன் ஆரம்பமாக உள்ளது . கடந்த வருடத்தோடு முடிந்த ஏழு சீசன்களிலும் நடிகர் கமலஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆனால் திடீரென்று அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கமலஹாசன் இடத்திற்கு வரும் பிரபலம் யார் என்று கேள்வி ரசிகர்கள் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் வெளியேறியது பற்றி பிரபல டிவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிக்கையில், 7 ஆண்டுகளாக ஈடு இணையில்லாத பங்களிப்பை கொடுத்த கமல் சாருக்கு நன்றி. பார்வையாளர்களிடம் மட்டுமின்றி போட்டியாளர்களிடமும் பேசி அவர்களிடம் இருந்து சிறந்தது வெளிக்கொண்டு வந்தீர்கள். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் இடத்தில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுப்பதாக அறிவித்திருப்பது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இருந்தாலும் உங்களின் காரணங்களை மதிக்கிறோம். உங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் அடுத்த தொகுப்பாளர் யார் என்று விபரத்தை வெளியிடவில்லை