CINEMA
“ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” ராபர்ட்-வனிதா சேர்ந்து போட்ட பதிவு… கண்டபடி திட்டும் இணையவாசிகள்…!!

நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா வெள்ளித்திரை, சின்னத்திரையில் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய நீண்ட கால நண்பரான டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
இவருக்கு கடந்த 2020ல் பீட்டர் என்பவருடன் மூன்றாவதாக திருமணம் நடந்தது. ஆனால், சில நாள்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் பீட்டரும் மரணமடைந்தார். இந்நிலையில், அக்.5 ஆம் தேதி பிக்பாஸ் புகழ் ராபட் மாஸ்டரை திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக Save the Date’ என்ற கெப்ஷனுடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என பிக்பாஸ் புரோமோவில் விஜய் சேதுபதி கூறியதை வனிதா விஜயகுமார்- ராபட் மாஸ்டர் இணைந்து ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு இணையவாசிகள் கண்டபடி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram