CINEMA
“வேட்டையன்” படத்தில் ரித்திகா சிங்கின் கதாபாத்திரம் என்ன தெரியுமா…? படக்குழு அறிவிப்பு…!!

ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையின் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவரோடு அமிதாபச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் நடித்தார்கள். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 10ஆம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது .படத்தின் முதல் பாடலான மனசிலாயோ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக இன்று முதல் அறிமுகம் செய்யப்படும் என்று பட நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் நடிகை ரித்திகா சிங் ரூபா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக படக்குழு அறிவிப்பு.