வருங்கால மருமகன் மற்றும் குடும்பத்துடன் ஈஷா கோவிலுக்கு சென்ற ரோபோ சங்கர்… வெளியான அழகிய புகைப்படங்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

வருங்கால மருமகன் மற்றும் குடும்பத்துடன் ஈஷா கோவிலுக்கு சென்ற ரோபோ சங்கர்… வெளியான அழகிய புகைப்படங்கள்..!!

Published

on

கடந்த சில நாட்களாகவே ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் திருமண விஷயம்தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது திருமணம் குறித்த தகவலை அண்மையில் இணையத்தில் கூறி இருந்தார்.

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் வளர்ந்து அதன் பிறகு தொகுப்பாளராக பணியாற்றி தற்போது வெள்ளி திரையில் முன்னணி காமெடி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் ரோபோ சங்கர்.

Advertisement

குறுகிய காலத்திலேயே பிரபலமான இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு பிரியங்கா என்ற நடன கலைஞரைகாதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இந்த ராஜா என்ற ஒரு மகளும் உள்ளார்.

இவர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் ஆக்டிவா இருக்கும் இந்திரஜா தனது முறை மாமருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து நிலையில் இவர்களின் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் கார்த்திக் என்பவர் தொடர்வோம் என்ற தன்னார்வலர் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையில் பல குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள்.

Advertisement

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் ரோபோ சங்கருக்கு நெருங்கிய உறவினர் என்பதால் இந்த நிச்சயம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் வரை சென்றுள்ளது.

இவருக்கு இயக்குனராக வேண்டும் என்ற ஆசை உள்ளதால் இந்திரஜாவும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால் இருவரும் சேர்ந்து பயணிக்கின்றனர். அடிக்கடி இணையத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இந்திரஜா தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

Advertisement

இவர்களின் திருமண தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் ரோபோ சங்கர் தனது குடும்பத்துடன் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா கோவிலுக்கு சென்றுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்களை தொடர்வோம் கார்த்தி இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in