LATEST NEWS
‘தவறான முடிவு எடுத்துட்டேன்’.. எல்லாத்துக்கும் அவர்தான் காரணம்.. வைரலாகும் நடிகை சமந்தாவின் பதிவு..!!

முன்னணி நடிகையான சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.
தென்னிந்தியா சினிமாவில் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவரும் பிரபல நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
இதனையடுத்து மயோசிட்டிஸ் என்ற நோயால் சமந்தா பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். மேலும் நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் சமந்தா அளித்த பேட்டியில், தனது முன்னாள் கணவர் நாக சைதன்யா பற்றி மறைமுகமாக கூறியுள்ளார்.
அதாவது எனது வாழ்க்கையில் நான் எடுத்த பல முடிவுகளில் எனது பார்ட்னரின் இன்புளுயன்ஸ் இருந்திருக்கிறது. எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பதை கூட இத்தனை காலம் நான் மறந்துவிட்டு இருந்திருக்கிறேன் என கூறியுள்ளார்.