LATEST NEWS
மீண்டும் காமெடியனாக நடிக்கும் சந்தானம்…. சம்பளம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?…. கேட்டா தலையே சுத்துது….!!!

தமிழ் சினிமாவில் முன்னாடி காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாக திகழ்பவர் நடிகர் சந்தானம். எப்பொழுதும் திரைப்படங்களில் கவுண்டர் டயலாக்குகளுடன் அனைவரையும் சிரிக்க வைக்கும் சந்தானம் சில வருடங்களாக ஹீரோவாக களமிறங்கியுள்ளார். அவர் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குலு குலு. இந்தத் திரைப்படத்தில் ஆக்சன் கிங் போல சந்தானம் களமிறங்கியுள்ளார்.
ஒரு பக்கம் ஹீரோவாகவும் மறுபக்கம் காமெடி நடிகராகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இந்தத் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது கிக் என்ற திரைப்படத்தை கைவசம் வைத்துள்ள சந்தானம் அடுத்ததாக மீண்டும் காமெடியனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அஜித் நடிப்பில் உருவாக உள்ள ஏகே 62 திரைப்படத்தில் சந்தானம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த திரைப்படத்தில் அவர் காமெடியனாக நடிக்கிறாரா என்று உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஏகே 62 திரைப்படத்தில் நடிப்பதற்கு 10 கோடி சம்பளமாக சந்தானம் வாங்கியுள்ளார் என்று புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி தொடங்க உள்ளது.