LATEST NEWS
திடீரென மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்த செல்வராகவன்?…. அவரே வெளியிட்ட பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன்,ஆயிரத்தில் ஒருவன் மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் நடிகர் தனுஷின் வளர்ச்சிக்கு செல்வராகவனும் முக்கிய காரணம். இயக்குனராக பலம் வந்த செல்வராகவன் தற்போது சாணி காகிதம் மற்றும் பகாசுரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.
இதனிடையே செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட ஒரு பதிவு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதாவது தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போவோம், நடுவில் என்ன துணை வேண்டி கிடைக்கிறது? துணை என்பது கானல் நீர், நெருங்க நெருங்க தூரம் போடும் என்று அவர் பதிவிட்டு இருந்தார். இதனை பலரும் விவாகரத்தா என கேள்வி எழுப்பி வந்தநிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செல்வராகவன் போட்டுள்ள ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க