LATEST NEWS
பேருக்கு மட்டுமில்ல….! நீங்க உண்மையாவே மகாலட்சுமி தான்….. புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்…. வைரலாகும் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் கடந்த மாதம் முழுவதும் பரபரப்பாக பேச விட்டு வந்த விஷயம் எதுவென்றால் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திருமணம் தான். இவர்கள் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு பல இன்டர்வியூக்களில் திருமணம் தொடர்பான பல விஷயங்களை பகிர்ந்து இருந்தனர். மகாலட்சுமி பணத்திற்காக தான் அவரை திருமணம் செய்து கொண்டார் என்று பலரும் விமர்சித்து வந்த நிலையில் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதத்தில் பல கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இதைத்தொடர்ந்து தற்போது இருவரும் சாதாரணமாக தங்களது குடும்ப வாழ்க்கையை தொடர்ந்து வருகின்றன. மேலும் மகாலட்சுமி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் மகாலட்சுமி வழக்கம் போல தனது பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் அழகான புடவையில் சூப்பராக மேக்கப் போட்டு போட்டோ ஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அட நம்ம மகாலட்சுமியா இது என்று கூறி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் நீங்கள் உண்மையாவே மகாலட்சுமி தான் என்று வர்ணித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram