CINEMA
“அதுக்காக மட்டும் தான்” சினிமாவுல என் உடம்பை காட்டி சம்பாதிச்சேன்…. மனம் திறந்த நடிகை ஷகிலா…!!

மலையாளத் திரை உலகில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகை தான் ஷகிலா. இவர் நடித்த படங்கள் கேரளாவில் மாபெரும் வெற்றி பெற்றன. மோகன்லால் மற்றும் மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுடன் இவரின் படத்துடன் மோதுமளவிற்கு இருந்தது. இவரின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றன. இதனைத் தொடர்ந்து ஷகிலாவுக்கு மலையாள திரையுலகம் தடை விதித்ததால் அவர் தமிழில் என்று கொடுத்து கிளாமர் படங்களில் நடித்தார்.
அதன் பிறகு கிளாமரில் நடிப்பதை தவிர்த்த இவர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் ஷகிலா சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், வயித்து பசிக்கு சோறு வேணும். எவன் குடும்பத்தையும் அழிக்கல,. எவன் கழுத்தையும் அறுக்கல,. என் உடம்பு இருந்தது அதை காட்டி நடித்து சம்பாதிச்சிகிட்டேன். இதனால், பல தயாரிப்பாளர்கள், பல தொழில்நுட்ப கலைஞர்கள் நல்லா வாழ்ந்தாங்க. இதை நினைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக போக வேண்டியது தான் என்று கூறியுள்ளார்.