CRIME
“அடிப்பாவி.. இந்திய-நேபாள எல்லையில் பெண் செய்த அதிர்ச்சி காரியம்..” அலறிப்போன SSB ஜவான்கள்.. புர்காவுக்குள் மறைந்திருந்த பகீர் ரகசியம்.. வைரல் வீடியோ..!!
இந்திய-நேபாள எல்லையில் பின்தொடர்ந்து வந்த எல்லைப் பாதுகாப்புப் படை ஜவான்கள், புர்கா அணிந்து சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற பெண் ஒருவரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அவரது உடலில் கட்டுகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் தாள்கள் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எல்லையைக் கடந்து இந்தியாவிற்குள் நுழைய முயன்ற அந்தப் பெண்ணின் அசைவுகளில் சந்தேகம் அடைந்த ஜவான்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்திய போது, இந்த நூதன கடத்தல் முயற்சி அம்பலமானது.
முதற்கட்ட விசாரணையின்படி, எல்லையோர போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் பின்னணியில் இப்பெண் ஒரு கடத்தல் முகவராகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர். இந்தப் போதைப்பொருட்கள் யாரிடமிருந்து பெறப்பட்டன, எல்லையைக் கடந்து இந்தியாவின் எந்தப் பகுதிக்குக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டது என்பது குறித்து பிடிபட்ட பெண்ணிடம் SSB மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
