“சாக்லேட் ஆசை காட்டி” 5 வயது சிறுமி கொடூரக் கொலை… தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டு ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய வடமாநில காவலாளி.. பழிவாங்கும் நோக்கில் நடந்த பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“சாக்லேட் ஆசை காட்டி” 5 வயது சிறுமி கொடூரக் கொலை… தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டு ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய வடமாநில காவலாளி.. பழிவாங்கும் நோக்கில் நடந்த பயங்கரம்..!!

Published

on

தெலுங்கானா மாநிலம், மல்காஜ்கிரி மாவட்டம் பொள்ளாராம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பழிவாங்கும் நோக்கில் 5 வயது சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் ஆராய்ச்சி விஞ்ஞானியான பெர்னாண்டஸ் என்பவரின் மகள் ஆரேலியா, சனிக்கிழமை இரவு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மர்மமான முறையில் காணாமல் போனார்.

அக்குடியிருப்பில் காவலாளியாகப் பணியாற்றி, ஒழுங்கீன நடத்தை காரணமாகச் சமீபத்தில் வேலையை விட்டு நீக்கப்பட்ட பீகாரைச் சேர்ந்த விக்ரம் குமார் என்பவரே இதற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. அவர் அச்சிறுமியிடம் சாக்லேட் தருவதாக ஆசை காட்டி அழைத்துச் சென்று, கொலை செய்து, கை கால்களைக் கட்டிக் கல்லோடு சேர்த்து அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளார். பின்னர் சிறுமியின் தந்தைக்கு இந்தியில் போன் செய்து, ரூ.20 லட்சம் பணம் பறிக்க முயன்றுள்ளார்.

Advertisement

தகவலறிந்து விரைந்த காவல்துறையினர், தண்ணீர் தொட்டியில் இருந்து சிறுமியின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றின் உதவியோடு தலைமறைவாக இருந்த குற்றவாளி விக்ரம் குமாரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in