LATEST NEWS
ரிலீசான 5 நாட்களில்.. சம்பவம் செய்த சிவகார்த்திகேயன்.. அயலான் வசூல் எவ்வளவு தெரியுமா..?

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனை அடுத்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இவர் ரஜினிமுருகன், மான் கராத்தே, கனா உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாடியுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார்.
அயலான் திரைப்படம் குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகளை பெரிதும் கவர்ந்தது. ரிலீசான முதல் நாளில் அயலான் திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. அயலான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பாக்ஸ் ஆபிஸில் அயலான் 53 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்ததாக அறிவித்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அந்த திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதேபோல அயலான் திரைப்படமும் எதிர்பார்த்ததை விட சிறந்த வெற்றியை தேடி கொடுத்துள்ளது.