“இனி இதை செஞ்சா ஜெயில்” ரயிலில் சத்தமாக போன் பேசுபவர்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிரடி செக்.. ₹5,000 அபராதம் பாயும் என எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனி இதை செஞ்சா ஜெயில்” ரயிலில் சத்தமாக போன் பேசுபவர்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிரடி செக்.. ₹5,000 அபராதம் பாயும் என எச்சரிக்கை..!!

Published

on

ரயில்களில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மொபைல் போன்களில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது மற்றும் சத்தமாகப் பேசுவதற்கு எதிராகத் தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகளைக் கட்டுப்படுத்தவும், அமைதியான பயணச் சூழலை உருவாக்கவும் ரயில்வே நிர்வாகம் புதிய கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

இனி ரயில்களில் பயணம் செய்யும் போது சக பயணிகளுக்குத் தொந்தரவு கொடுக்கும் வகையில் சத்தமாகப் பேசினாலோ அல்லது ஹெட்போன் பயன்படுத்தாமல் மொபைலில் பாடல்கள் மற்றும் வீடியோக்களைப் பார்த்தாலோ ரயில்வே சட்டப் பிரிவு 145(2)-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த எச்சரிக்கையை மீறித் தொடர்ந்து தொந்தரவு செய்யும் பயணிகளுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படுவதுடன், ரயிலில் இருந்து உடனடியாக இறக்கிவிடவோ அல்லது அவர்களின் டிக்கெட்டை ரத்து செய்யவோ ரயில்வே அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், இந்த விதியை மீறித் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தால் அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ரயில்களில் பயணம் செய்யும் போது இதுபோன்ற தொந்தரவுகளை எதிர்கொள்ளும் பயணிகள், உடனடியாக 139 என்ற ரயில்வே உதவி எண்களுக்கோ அல்லது ரயிலில் இருக்கும் அதிகாரிகளிடமோ நேரடியாகப் புகார் அளிக்கலாம் என்றும் தெற்கு ரயில்வே பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in