LATEST NEWS
“சட்டப்பேரவைக்குள்ள ஸ்டாலினை கொண்டு வர்றோம்” திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டி..? திமுக போடும் பலே திட்டம்..!
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடப் போவதாக அரசியல் வட்டாரங்களில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் மூத்த நிர்வாகிகளின் தொடர் வற்புறுத்தல் மற்றும் ஆலோசனைகளின் காரணமாகவே, இந்தத் தேர்தலில் நேரடியாகக் களமிறங்கும் முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவிற்குச் சாதகமாக அமைந்ததால், கட்சி மீண்டும் பெரும் எழுச்சி பெற்றுள்ளதாக உடன்பிறப்புகள் நம்புகின்றனர். இந்தத் தேர்தல் வெற்றிகள் தந்த உற்சாகமே, கட்சியின் முக்கியத் தலைவரை மீண்டும் தேர்தல் களத்தில் இறக்க நிர்வாகிகளுக்குத் துணிச்சலைத் தந்துள்ளது.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை மீண்டும் சட்டப்பேரவைக்குள் நுழைய வைப்பதன் மூலம், தற்போதைய முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசிய பேச்சுக்குப் பதிலடி கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, “அப்பாவை காணோம்” என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியதற்கு தேர்தல் களம் மூலமாகவே தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இந்த வியூகத்தை வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
