LATEST NEWS
அப்படியே அம்மாவ உறிச்சி வச்சிருக்கும் சுனைனா…. இணையத்தை கலக்கும் சிறுவயது புகைப்படம்…. நீங்களே பாருங்க…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகை தான் சுனைனா. சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் நகுல் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக கை கொடுக்கவில்லை. சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான லத்தி திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். அடுத்ததாக ரெஜினா என்ற திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சுனைனா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
சிறுவயதில் அவரின் அம்மாவுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை தற்போது பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் அச்சு அசல் அவர் தன்னுடைய அம்மா போலவே இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க