LATEST NEWS
சுரேஷ் கோபியின் செயலால் … அதிர்ச்சி அடைந்த பெண் செய்தியாளர்… கண்டனம் எழுப்பிய பத்திரிக்கையாளர் சங்கம்…!

மலையாள சினிமாவின் டாப் நடிகர்களுள் ஒருவரான சுரேஷ்கோபி தமிழ் சினிமாவில் தீனா, ஐ போன்ற ஒரு சில படங்கள் நடித்துள்ளார். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதன்படி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக கடந்த 20 16 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு இதே ஆண்டில் பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ் கோபி அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்பொழுது பெண் செய்தியாளர் ஒருவர் அவரிடம் கேள்வி கேட்க வந்த பொழுது, சுரேஷ்கோபி அந்தப் பெண் பத்திரிக்கையாளர்களின் தோலின் மேல் தனது கையினை வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பத்திரிக்கையாளர் உடனே கையை தட்டி விட்டு பின்னால் சென்றுள்ளார்.
பின்பு மறுபடியும் வந்த அந்த பத்திரிக்கையாளர் கேள்வி கேட்க முயன்ற பொழுது மீண்டும் அவர் அதே போல் செய்ய அவர் மேல் கை வைத்து பதில் அளித்துள்ளார் சுரேஷ் கோபி. இதனால் அதிருப்தி அடைந்த பத்திரிக்கையாளர் சங்கமானது சுரேஷ்கோபியின் மீது தங்களது கண்டனங்களை எழுப்பியுள்ளனர்.
மேலும் கோபம் அடைந்த அவர்கள் சுரேஷ்கோபியை அப்பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கூற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதனால் சுரேஷ்கோவில் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, ‘நான் பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்ட கொள்ளவில்லை. நான் பொது இடங்களிலோ வேறு இடங்களிலோ தவறான முறையில் நடந்து கொண்டதில்லை. இதனையடுத்து நான் நடந்து கொண்ட விதம் அவருக்கு தவறாக பட்டிருந்தால் நான் மன்னிப்பு கூறுகிறேன். மேலும் அதில் அவரின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.