“இறுதி மூச்சு வரை சிறை தண்டனை..” 7 வயது சிறுமி வழக்கிற்கு 3 மாதத்தில் வந்த அதிரடி தீர்ப்பு..! கதறி அழுத தாய்… கைகூப்பி மன்னிப்பு கேட்ட நீதிபதி..!! – cinefeeds
Connect with us

CRIME

“இறுதி மூச்சு வரை சிறை தண்டனை..” 7 வயது சிறுமி வழக்கிற்கு 3 மாதத்தில் வந்த அதிரடி தீர்ப்பு..! கதறி அழுத தாய்… கைகூப்பி மன்னிப்பு கேட்ட நீதிபதி..!!

Published

on

ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் ஏழு வயது சிறுமி மீது நடத்தப்பட்ட வன்கொடுமை வழக்கில், போக்ஸோ நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவாளிக்கு அவனது இறுதி மூச்சு வரை சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்றவாளிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தீர்ப்பை வாசிக்கும்போது நீதிபதியும் உணர்ச்சிவசப்பட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் முன்பு கை கூப்பி மன்னிப்பு கேட்டார். சுமார் மூன்று மாதங்களாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு வந்த இந்தத் தீர்ப்பு, குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம், ஏழு வயது சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர், அந்தச் சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி புதர்கள் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளார். சம்பவத்திற்குப் பிறகு அதிர்ச்சியடைந்த சிறுமி, மிகுந்த தைரியத்துடன் நடந்த விவகாரத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே சிறுமியின் தந்தை மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த வழக்கின் தீவிரத்தன்மையை உணர்ந்த காவல்துறையினர், வெறும் 15 நாட்களுக்குள் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

Advertisement

சுமார் மூன்று மாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது, தரப்பு வழக்கறிஞர்கள் 20 சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர் மற்றும் பல்வேறு ஆவணங்களைச் சான்றுகளாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அனைத்து சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளியைக் குற்றவாளி என உறுதிப்படுத்திய நீதிமன்றம், இறுதி மூச்சு வரை சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மேலும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறைக்கும் உத்தரவிட்ட நீதிமன்றம், நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவும், சிறப்பு ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in