LATEST NEWS
2015-ஆம் ஆண்டு வெளியான படத்திற்கு இப்போ விருதா..? மாதவன், ஜெயம் ரவியை பின்னுக்கு தள்ளிய ஜோதிகா.. முதல் பரிசு யாருக்கு தெரியுமா..?

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் திரை துறையினருக்கான விருதுகள் வழங்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 2014 2015-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்படம் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் முதலிடத்தில் இருப்பது ஜெயம் ரவி நடித்து சூபார் ஹிட்டான தனிஒருவன் படம். இந்த படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது உள்பட 6 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிறந்த படத்திற்கான இரண்டாம் பரிசு பசங்க 2 படத்திற்கு கொடுக்கப்பட உள்ளது.
சிறந்த படத்திற்கான மூன்றாம் பரிசு பிரபா திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதவன் நடித்த இறுதி சுற்று படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 6 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஜோதிகா கம்பேக் கொடுத்த 36 வயதினிலே திரைப்படத்திற்கு சிறந்த நடிகை, சிறப்பு பரிசு உள்பட 7 விருதுகள் கிடைத்துள்ளது. இதில் பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படமாக முப்பத்தி ஆறு வயதினிலே திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.