Uncategorized
மிலிட்டரி சரக்கு கேட்டு… ‘முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்துடன்’… போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை’… கிளப்பியுள்ளது.!

கன்னியாகுமரி அருகே உள்ள தக்கலையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான கேன்டீன் செயல்பட்டு ஒன்று உள்ளது. அதில், மதுபானங்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் ராணுவ வீரர்களுக்காக விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த கேன்டீனில் சட்ட விரோதமாக மிலிட்டரி சரக்கு விற்கப்பட்டு வருவதாகக் கூறி சில மாதங்களுக்கு முன் விற்பனை தடை செய்யப்பட்டது.
இதையடுத்து, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சிலர் தங்களுக்கு மிலிட்டரி சரக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் தங்களது மனைவிகளோடு வந்து கேன்டீன் முன் அமர்ந்து மிலிட்டரி சரக்கு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.