மனைவியை 600 துண்டுகளாக வெட்டி டிபன் பாக்சில்… அடைத்து வைத்த கணவர்…?” ஜன்னல் வழியே கண்ட அதிர்ச்சி….” - cinefeeds
Connect with us

TRENDING

மனைவியை 600 துண்டுகளாக வெட்டி டிபன் பாக்சில்… அடைத்து வைத்த கணவர்…?” ஜன்னல் வழியே கண்ட அதிர்ச்சி….”

Published

on

தனது மனைவியை பீஸ் பீஸாக நறுக்கி, உடல் பாகங்களை டிபன் கேரியரில் அடைத்து வைத்து முன்னாள் இராணுவ வீரர் செய்த பயங்கரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் இராணுவ டாக்டர் சோம்நாத் பரிதா, கடந்த 2013ம் ஆண்டு தனது மனைவி உஷஸ்ரீ சமலை உடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், இரும்பு கம்பியால் மனைவியின் தலையில் அடித்து கொன்றுள்ளார். பின்னர் அவருடைய உடலை பீஸ் பீஸாக 300 துண்டுகளாக வெட்டி, சிறிய டிபன் பாக்ஸ்களில் அடைத்து வைத்துள்ளார். பின்னர் வெளியே துர்நாற்றம் வெளியில் வந்துவிடக்கூடாது என்பதற்காக உடல் பாகங்களின் மீது பினாயிலை ஊற்றி வைத்துள்ளார்.

Advertisement

இதற்கிடையில் வெளிநாட்டில் இருந்த தம்பதியினரின் பிள்ளைகள் தொடர்ந்து போன் செய்துள்ளனர். அனால் எந்த பதிலும் கிடைக்காததால் தங்களுடைய சொந்தக்காரர்களுக்கு தகவல் கொடுத்து வீட்டிற்கு சென்று பார்க்குமாறு சொல்ல அந்த நபர், நீண்ட நேரமாக கதவை தட்டியும் சோம்நாத் பதில் கொடுக்காததால், ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளார். அங்கு துர்நாற்றம் வந்ததால் சந்தேகத்தின் பேரில் போலீசாருக்கு தகவல் சொல்ல அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டில் சோதனை மேற்கொண்டு உடல் பாகங்களை கைப்பற்றினர்.

ஆரம்பத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக கூறிவந்த அவர் இறுதியில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். 6 வருடங்களுக்கு பின் நீதிமன்றத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in