LATEST NEWS
நடிகை என நினைத்து கடந்த ஆறு மாதம் ஆபாசம்… ‘இரவில் தூங்க விடவில்லை என கதறும் முதியவர்’..? அம்பலமான உண்மை..!

பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினியின் பேக் ஃபேஸ்புக் ஐடியால் ராத்திரி நேரத்தில் தனது தூக்கத்தை தொலைத்ததோடு, மனரீதியாக பல அவஸ்தைகள் பட்டதாக சமக பிரமுகர் குமுறியுள்ளார் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் குருநாதன். இவர் சரத்குமாரின் ச.ம.க ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கிய மர்ம நபர்கள், அந்த பக்கத்தில் குருநாதனின் போன் நம்பரைப் அப்டேட் பண்ணியுள்ளார். இது மைனா நந்தினியின் மொபைல் நம்பர் என நினைத்துப் பலரும் இரவு பகல் பாராமல் குருநாதனுக்கு போன் செய்திருக்கின்றனர்.
முக்கியமாக தினமும் இரவு 10 மணியை கடந்தால் போதும் குருநாதன் பிஸி ஆயிடுவார். அந்த அளவிற்கு அடுத்தடுத்து அவரது மொபைல் போனுக்கு தொடர்ந்து போன் கால் வந்துள்ளது.
எதிரில் பேசுவது ஆணா, பெண்ணா என கூட தெரியாமல் எடுத்த வேகத்தில் மைனா, நீங்கள் ரொம்ப அழகாக தேவதை மாதிரி இருக்கீங்க என்பது போல செக்சியாகவும் பேசி வருகிறார்களாம். போன் கால் உள்நாடு மட்டும் அல்ல வெளி நாடுகளில் இருந்தும் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும் என்கிறார் சமக குருநாதன்.
சுமார் 4 மாதங்களாக இந்த போன் கால் கொடுமையை அனுபவித்த குருநாதன் பொறுமையிழந்து போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், இரவு நேரத்தில் ஏதோ அவசர போன் கால் வருகிறது என நினைத்தால், நடிகையைக் கேட்டு அசிங்க அசிங்கமாக பேசி நோகடிக்கிறார்கள், இவர்களால் பல நாள் தூக்கம் பறிபோனது தன் மிச்சம், முக்கிய போன் கால் வரும் பொது போனையும் அணைத்து வைக்க முடியவில்லை என கோரியுள்ளார்.