இளம்பெண் எடுத்த திடீர் முடிவு —தாயிக்கு ‘மெசேஜ்’ ஒன்றை அனுப்பிவிட்டு… நடந்த அதிர்ச்சி சம்பவம்… மிரண்டு போன கணவர்!!! - cinefeeds
Connect with us

Uncategorized

இளம்பெண் எடுத்த திடீர் முடிவு —தாயிக்கு ‘மெசேஜ்’ ஒன்றை அனுப்பிவிட்டு… நடந்த அதிர்ச்சி சம்பவம்… மிரண்டு போன கணவர்!!!

Published

on

ஈரோட்டில் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தாய்க்கு போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.எதை கண்ட அவரது தாயார் கதறி அழுதார்….இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது…

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த தம்பதி சதீஷ்குமார் (28) – சத்யா (26). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சத்யாவுக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறால் கோபத்துடன் தாய் வீட்டிற்குச் சென்ற சத்யா 2 மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் கணவருடன் வந்து வாழ தொடங்கிஉள்ளார்.

Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்க சென்றுள்ளனர். பின்னர் அடுத்த நாள் காலை சதீஷ்குமார் எழுந்து பார்த்தபோது சத்யா வீட்டில் தொட்டில் கட்டும் கம்பியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதைப் பார்த்து அதிர்ந்துபோன அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன் இடையே தனது தாய் பூங்கொடிக்கு நேற்று காலை சத்யா செல்போனில் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது மரணத்திற்கு கணவரே காரணம் என இருந்துள்ளது. அதைப்பார்த்து உடனே பதறியடித்து அவருடைய தாய் ஓடிவந்துள்ளார். ஆனால் அதற்குள் சத்யா இறந்திருக்க, மகளின் உடலை பார்த்த அவர் கதறி அழுதுள்ளார். இதைத்தொடர்ந்து அவருடைய உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து பூங்கொடி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. . தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 க்கு தெரிவிக்க வேண்டும்…

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in