CINEMA
மெய்யழகன் படத்தில் ‘தல’ தோனி Reference ஆ…? போஸ்டரில் இருந்த அந்த விஷயம்…. கண்டுபிடித்த ரசிகர்கள்….!!

நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெய்யழகன்’ . இந்த திரைப்படத்தின் இசை வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இத்திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகிறது.
இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நாளை (ஆகஸ்ட் 31) கோவை கொடிசியா ஹாலில் நடைபெறவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் போஸ்டரில் நடிகர் கார்த்தியின் கையில் தோனி என்ற பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது .இதனால் கார்த்தி கதாபாத்திரம் தோனி ரசிகராக இருக்கலாம் என்று இணையத்தில் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.