LATEST NEWS
“மாரடைப்புனு சொல்லிப் புதைச்சாச்சு..!” மனைவியின் கொடுத்த ‘அந்த’ வாக்குமூலம்.. தோண்டி எடுக்கப்படும் கணவனின் சடலம்.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரின் ரசூல்பூர்-தாபேரியைச் சேர்ந்த தாலிப் என்பவர் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை என்றும், அவரது மனைவி இல்மா தனது கள்ளக்காதலன் அமன் மற்றும் அவனது நண்பனுடன் சேர்ந்து அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் பிரஹ்ம்பூரி பகுதியில் உள்ள அஞ்சும் பேலஸ் குடியிருப்பைச் சேர்ந்த மோமின் என்பவரின் மகள் இல்மாவிற்கும் தாலிபிற்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, அவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், கணவனின் கண்முன்னே கள்ளக்காதலைத் தொடர முடியாததால், இல்மா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலிபைத் துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், எவ்வித சந்தேகமும் வராதவாறு தாலிப் மாரடைப்பால் திடீரென இறந்துவிட்டதாகக் கூறி அவரது உடலை அடக்கம் செய்துள்ளனர்.
தாலிபின் மரணத்தில் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் நடத்திய அதிரடி விசாரணையில் மனைவி இல்மா தனது கொடூரக் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். தாலிபைக் கள்ளக்காதலன் அமன் மற்றும் அவனது நண்பர் ஆகியோர் சேர்ந்து பிடித்துக் கொள்ள, இல்மா தனது துப்பட்டாவைப் பயன்படுத்தித் தாலிபின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, உண்மையான மரணக் காரணத்தைக் கண்டறியத் தாலுகா நடுவர் முன்னிலையில் தாலிபின் உடலைத் கல்லறையிலிருந்து தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்யக் காவல் துறையினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி தரும் கள்ளக்காதல் விபரீதம் மற்றும் குடும்பத் துரோகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
