“கண்ணில் எலுமிச்சை பழத்தை பிழிந்து” 21 வயது இளம்பெண்ணை 40 நாட்கள் அறையில் பூட்டி வைத்து சித்திரவதை… மாந்திரீகக் கும்பலின் பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கண்ணில் எலுமிச்சை பழத்தை பிழிந்து” 21 வயது இளம்பெண்ணை 40 நாட்கள் அறையில் பூட்டி வைத்து சித்திரவதை… மாந்திரீகக் கும்பலின் பகீர் பின்னணி..!!

Published

on

மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் துலே மாவட்டங்களில் தீராத நோய் மற்றும் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, ஏழைத் தொழிலாளி குடும்பம் ஒன்றிடமிருந்து ரூ.1.60 லட்சம் பறித்து மோசடி செய்த பெண் மாந்தீரிகர் சரிதா ஜாதவ் மற்றும் அவரது கூட்டாளிகளைத் துலே நகர போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மூடநம்பிக்கையை ஒழிக்கும் அமைப்பின் உதவியோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், செய்வினை மற்றும் மாந்திரீகத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணத்தைப் பறித்துக்கொண்ட அந்தப் பெண் மாந்தீரிகர், பாதிக்கப்பட்ட பெண்ணை நாசிக்கில் உள்ள கோதாகாட் பகுதிக்கு அழைத்துச் சென்று மனிதாபிமானமற்ற முறையில் ‘அகோரி குளியல்’ செய்ய வைத்துள்ளார். அத்தோடு நில்லாமல், மூடநம்பிக்கையின் உச்சமாக அந்தப் பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட எலுமிச்சம்பழச் சாற்றை நேரடியாக அவரது கண்களில் பிழிந்து கடுமையான சித்திரவதையும் செய்துள்ளார்.

Advertisement

மேலும், அந்தப் பெண் மாந்தீரிகர் அக்குடும்பத்தின் 21 வயது மகளுக்குக் கொடிய நோய் இருப்பதாகப் பயமுறுத்தி, அவளைச் சுமார் 40 நாட்கள் வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்துள்ளார். அதன்பின்னர், கடந்த ஜூலை மாதம் அந்தப் பெண்ணிற்கு வலுக்கட்டாயமாகத் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்துவிட்டுத் தப்பியோடியுள்ளார். இந்த மாந்திரீகக் கும்பலிடம் சிக்கி மேலும் யாரெல்லாம் ஏமாந்துள்ளனர் என்பது குறித்துப் போலீசார் தற்பொழுது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in