LATEST NEWS
மம்முட்டியை வசைபாடிய பிரபல நடிகையின் தந்தை…..! அவர் சொன்னதுலையும் நியாயம் இருக்குல்ல பா….!!!!

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மம்முட்டி. இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி யூடியூப் சேனல் தொகுப்பாளினி இடம் மோசமாக நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டார். மேலும் இப்போது அவர் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகாரின்படி ஸ்ரீநாத் புது படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒப்பந்தமான திரைப்படங்களின் நடிக்க தடை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மம்முட்டியிடம் இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தால் மம்முட்டி யாராக இருந்தாலும் அவரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதமாக இத்தகைய தடையை விதிக்கக்கூடாது என்று கூறியிருந்தார்.
இவருடைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷின் தந்தையும், தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் இது தொடர்பாக ஆவேசமாக பதிலளித்துள்ளார். அதாவது நடிகர்களுக்கு மட்டும்தான் வாழ்வாதார பிரச்சனை உள்ளதா? தயாரிப்பாளர்களுக்கு கிடையாதா? தயாரிப்பாளர்கள் எடுக்கும் முடிவுகள் குறித்து முழு விவரம் தெரியாமல் இப்படி பேசுவது சரியானது கிடையாது. யாரால் தொடர்ந்து பிரச்சினைகள் உருவாகின்றது என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் மீது மட்டும்தான் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.