CINEMA
24 மணி நேரத்தில் எகிறி அடிச்ச டிரெய்லர்…. கோலிவுட்டில் சாதனை படைத்த G.O.A.T…!!
நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான திரைப்படம் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் மீனாட்சி சவுத்ரி உட்பட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது . சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் அதிக வியூஸ்களை பெற்ற கோலிவுட் டிரைலர் என்ற சாதனை படைத்துள்ளது. அதாவது படத்தின் டிரைலரை 24 மணி நேரத்தில் 3.3 கோடி பேர் பார்த்துள்ளனர். இதுவரை சுமார் ஐந்து கோடிக்கு அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது இந்த ட்ரைலர்.