VIDEOS
மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறும் லியோ ஆடியோ லான்ச்.. வீடியோ வெளியிட்டு உறுதி செய்த படக்குழு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே விஜய் தன்னுடைய பகுதியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டிற்கு தனது குடும்பத்துடன் ஓய்வெடுக்க சென்றுள்ளார்.
இந்நிலையில் ஒரு சில காட்சிகள் படப்பிடிப்புக்காக மீண்டும் பட குழுவினர் அனைவரும் காஷ்மீர் சென்றுள்ளதாகவும் அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் சஞ்சய் தத் பிறந்த நாளை முன்னிட்டு லியோ திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தின் டீசரும் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் லியோ திரைப்படத்தின் ஆடியோ லான்ச் மிகப் பிரம்மாண்டமாக மலேசியாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் மலேசியா சென்றுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. தற்போது லியோ ஆடியோ லான்ச் மலேசியாவில் நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக ஒரு வீடியோ வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் அதனை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க