“சீமானுக்குக் கீழே ஒருத்தனுக்குக் கூட ஞானம் இல்லை…!” மேடையிலேயே தம்பிகளை வறுத்தெடுத்த திருமாவளவன்.. திண்டிவனத்தில் வெடித்த அரசியல் புயல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சீமானுக்குக் கீழே ஒருத்தனுக்குக் கூட ஞானம் இல்லை…!” மேடையிலேயே தம்பிகளை வறுத்தெடுத்த திருமாவளவன்.. திண்டிவனத்தில் வெடித்த அரசியல் புயல்..!!

Published

on

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “பாமகவும், பாஜகவும் இடம்பெறும் அணியில் விசிக ஒருபோதும் இருக்காது” என்பதைத் தங்களின் 15 ஆண்டுகாலக் கொள்கை முடிவாக அவர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்துப் பேசிய அவர், “நண்பர் சீமான் நாகரிகமாகத்தான் பேசுகிறார்; ஆனால் அவருக்குக் கீழே இருக்கும் கும்பலில் ஒருவனுக்குக் கூட அரசியல் முதிர்ச்சியோ, பக்குவமோ, ஞானமோ இல்லை. சாதிவெறியர்களும் மதவெறியர்களும் அந்தக் கட்சியை ஆக்கிரமித்துக் கொண்டு, தெலுங்கு எதிர்ப்புதான் தமிழ்த்தேசியம் எனத் திரிபுவாதம் செய்கிறார்கள். சீமானுக்குக் கெட்ட பெயரே அந்த முதிர்ச்சியற்ற கும்பலால்தான் ஏற்படுகிறது” என்று மிகக் காட்டமாகச் சாடினார்.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன், விசிக-வின் இரண்டு சீட் அரசியல் மற்றும் திமுக, தவெக கட்சிகளுடனான விசிக-வின் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்துக் கடுமையாகப் பகடி செய்து விமர்சித்திருந்தார். அதற்கு மேடையிலேயே பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய திருமாவளவன், உண்மையான தமிழ்த்தேசியம் என்பது தமிழரசன் மற்றும் பிரபாகரன் ஆகியோரின் அணுகுமுறையைக் கொண்டது என்றும், தெலுங்கு மொழி பேசுபவர்களை எதிர்ப்பது தமிழ்த்தேசியம் அல்ல என்றும் விளக்கமளித்தார். இந்த அதிரடிப் பொதுக்கூட்டத்தில் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டு உரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in