CINEMA
ஷாருக்கான் மீது ஈர்ப்பு… அப்போதே திருமணம் செஞ்சிக்க ஆசைப்பட்டேன்…. டிரிப்தி டிம்ரி பளீச்…!!

ரன்பீர் கபூர் நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கத்தில் வெளியான திரைப்படம் அனிமல். இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் டிரிப்தி டிமிரி நடித்த கதாபாத்திரம் பேசும் பொருளானது .அதாவது கடும் விமர்சனத்திற்கு உள்ளான அவருடைய கதாபாத்திரம் அவரை இந்திய அளவில் பிரபலம் ஆக்கியது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய டிரிப்தி டிமிரி, ஷாருக்கான் மீது தனக்கு ஏற்பட்டுள்ள ஈர்ப்பு குறித்து கூறியுள்ளார். அதில் ஷாருக்கான் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும் அப்பொழுதே நான் ஷாருக்கான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று என்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் கூறினேன் என்று கூறியிருக்கிறார்.