LATEST NEWS
த்ரிஷா-நயன்தாரா….! இருவரும் ஒரே திரைப்படத்தில்….. ஒருத்தர் நடிச்சாலே சூப்பரா இருக்கும்…. இதுல ரெண்டு பேரும் நடிச்சா?…..!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வளம் வருகிறார் .
சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு ஹனிமூன் மற்றும் படங்களில் பிசியாக இருந்து வருகிறார். நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் கோல்ட் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இவரை போலவே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. ‘லேசா லேசா’ என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவரும் தொடர்ந்து பல முன்னாடி நடிகருடன் ஜோடி போட்டு நடித்து தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடித்து வைத்துள்ளார்.
சமீபத்தில் பொன்னின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து அசத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து மலையாளத்தில் ராம் என்ற படத்திலும் தமிழில் தீ ரோடு என்ற திரைப்படத்திலும் நடித்த வருகிறார். இந்நிலையில் நயன்தாராவும் திரிஷாவும் இணைந்து ஒரே திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மலையாளத்தில் ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவாக உள்ளதாகவும். அதில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.