LATEST NEWS
பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீமுக்கு விருந்து வைத்த வனிதா…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த வாரம் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற இறுதியாக ஷிவின், அசீம், விக்ரமன் ஆகிய மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர். இவர்களில் விக்கிரமன் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் இறுதியாக டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் தட்டி தூக்கினார்.
இவருக்கு 50 லட்சம் பரிசு மற்றும் ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் முடிந்து வெளியே வந்த அசீமை அழைத்து நடிகை வனிதா தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
