CINEMA
ராதிகா என் அம்மா கிடையாது…. அப்பாவின் இரண்டாவது மனைவி…. வரலட்சுமி சரத்குமார் Open Talk….!!

Varalaxmi Sarathkumar: தமிழ் திரையுலகில் ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தவர் சரத்குமார். இன்றும் இவரது படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. முன்னாள் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த சரத்குமார் அரசியல் கட்சி தொடங்கினார். சமீபத்தில் அவரது கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொண்டார்.
சரத்குமாருக்கு 1984 ஆம் ஆண்டு சாயா என்பவருடன் திருமணம் ஆன நிலையில் இத்தம்பதிக்கு வரலட்சுமி மகளாக பிறந்தார். அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு முதல் மனைவி சாயாவை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ராதிகாவை சரத்குமார் திருமணம் செய்து கொண்டார்.
ராதிகா – சரத்குமார் தம்பதிக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு சரத்குமார் தனது மகள் வரலட்சுமி திருமணத்தை தொழிலதிபர் ஒருவருடன் கோலாலமாக நடத்தினார். இதனிடையே நடிகை வரலட்சுமி ராதிகா குறித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில் “ராதிகா என்னுடைய அம்மா கிடையாது. அவர் எனது தந்தையின் இரண்டாவது மனைவி. சிலர் ராதிகா ஆன்ட்டி என்று ஏன் அழைக்கிறாய் என்று கேட்பார்கள். ஆனால் எனக்கு அது பிடிக்காது. எனக்கு அம்மா இருக்கிறார்கள். எனக்கு ஒரு அம்மா தான். நான் ராதிகாவை அம்மா என்று அழைக்க முடியாது.
ஆனால் நான் ராதிகாவிற்கு எனது அம்மாவிற்கு கொடுக்கும் மரியாதையை கொடுக்கிறேன். எங்களுக்குள் நல்ல ஒற்றுமை உண்டு. நாங்கள் மகிழ்ச்சியாக தான் இருக்கிறோம்.