LATEST NEWS
தயாரிப்பாளர்களுக்கு ஆப்பு வைத்த விஜய் ஆண்டனி.. திடீர்னு இப்படி பண்ணிட்டாரே.. பிரபல நிறுவனத்தின் அறிவிப்பால் சலசலப்பு..!!

முன்னணி நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நான் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். மேலும் பல்வேறு படங்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இவரது பாடல்களை கேட்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியான திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன், நான் பெற்றது.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி வள்ளி மயில் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனையடுத்து தனா இயக்கத்தில் உருவான ஹிட்லர் படத்திலும் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இந்த படத்தில் கௌதமேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பின்னர் விஜய் மில்டன் இயக்கிய மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்திலும் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
ஆனால் இந்த மூன்று படங்களும் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது சொந்த படமான ரோமியோ படத்தை திரையரங்குகளில் ஒளிபரப்ப விஜய் ஆண்டனி முடிவு செய்தார். இந்த படத்தை இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு, மலேசியா, பாங்காக், ஹைதராபாத், பெங்களூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
தான் நடித்த மூன்று படங்கள் ரிலீஸ் ஆக தாமதம் ஆனதால் விஜய் ஆண்டனி ரோமியோ படம் குறித்து ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் பேசியுள்ளார். அதன்படி ரெட் ஜெயண்ட் நிறுவனம் கோடை விடுமுறைக்கு ரோமியோ படத்தை திரையிட உள்ளதாக அறிவித்தது. ரோமியோ படத்தின் போஸ்டரும் வெளியாகி தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ரோமியோ படம் முதலில் திரைக்கு வர உள்ளதால் மற்ற படத்தின் தயாரிப்பாளர்கள் சிக்கலில் உள்ளனர்.

#image_title