“விசிகவுக்கு ‘கட்?… பாமகவுக்கு ரெட் கார்பெட்.. கூட்டணியில் அதிரடி மாற்றத்திற்குத் தயாராகும் முதல்வர் விஜய்.. தமிழக அரசியலில் பற்றிக்கொண்ட புதிய தீ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விசிகவுக்கு ‘கட்?… பாமகவுக்கு ரெட் கார்பெட்.. கூட்டணியில் அதிரடி மாற்றத்திற்குத் தயாராகும் முதல்வர் விஜய்.. தமிழக அரசியலில் பற்றிக்கொண்ட புதிய தீ..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விசிக இடையேயான உறவு குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக தலைவர் தொல். திருமாவளவன், சில சந்தர்ப்பங்களில் தவெக அரசின் போக்குகளுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பதும், குறிப்பாக அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் வெற்றிக்கு SIR போன்ற காரணங்கள் இருக்கலாம் என்று அவர் வெளிப்படையாகக் கருத்துக் கூறியதும் முதல்வர் விஜய்க்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.

கூட்டணியில் இருந்துகொண்டே ஆளுங்கட்சிக்கு எதிராகக் குரல் கொடுப்பதை முதல்வர் விஜய் பெரிதும் ரசிக்கவில்லை என்றும், இதனால் கூட்டணியின் எதிர்காலம் குறித்து அவர் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது. குறிப்பாக, விசிகவுடன் உள்ள கூட்டணியைத் தொடர்வதா அல்லது விலக்கிக் கொள்வதா என்பது குறித்த விவாதங்கள் பனையூர் வட்டாரங்களில் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் களத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

Advertisement

இதன் ஒரு பகுதியாக, சட்டமன்றத்தில் 4 இடங்களைக் கொண்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியைத் (பாமக) தங்களது கூட்டணிக்குள் கொண்டு வருவது சாத்தியமா என்பது குறித்தும் தீவிரமாக யோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடி அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணி மாற்றங்கள் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் புயலையும் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in