LATEST NEWS
அனிருத் இசையில் விஜய் ஒரு பாட்டு தான் பாடி உள்ளாரா…?ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுக்கும் { தளபதி விஜய் ..}

படத்தின் முதல் சிங்கிளான ஒரு குட்டி கதை பாடல் வெளியாகி ட்ரெண்டானது. அருண் ராஜா எழுதிய இப்பாடல் வரிகளுக்கு விஜய் குரல் தந்துள்ளார். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 129 நாட்கள் கொண்ட ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது.
மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ள படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.
ஏனெனில் விஜய் முதன் முறையாக சென்சேஷன் இயக்குனர் லோகேஷுடன் கைக்கோர்த்துள்ளது ஒரு காரணம் என்பதால்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சிங்கிள் ட்ராக் ஏற்கனவே வெளிவந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.
இதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் நாளை வெளிவரவுள்ளதாம், ஆம், நாளை மாலை 5 மணிக்கு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இப்பாடல் ‘வாத்தீகமிங்’ என்று தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதோ…