LATEST NEWS
லியோ படத்தில் ரசிகர்களுக்கு இப்படி ஒரு ட்விஸ்டா?… இதை யாருமே எதிர்பார்க்கல… விஜய் ரசிகர்களுக்கு குஷியான அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே விஜய் தன்னுடைய பகுதியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டிற்கு தனது குடும்பத்துடன் ஓய்வெடுக்க சென்றுள்ளார்.
இதனிடையே ஒரு சில காட்சிகள் படப்பிடிப்புக்காக மீண்டும் பட குழுவினர் அனைவரும் காஷ்மீர் சென்றுள்ளதாகவும் அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் நீயோ திரைப்படத்தின் ஆடியோ லான்ச் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் லியோ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் முதல் பாவத்தின் இறுதியில் இரண்டாம் பாவத்திற்கான டீசர் இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாம் பாகம் வருகின்ற 2025 ஆம் ஆண்டு அல்லது 2026 ஆம் ஆண்டு தொடங்கும் என லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜயின் அடுத்தடுத்த படங்களை பொறுத்து லியோ இரண்டாம் பாகம் உருவாகும் என கூறப்படுகிறது. எனவே லியோ 2 திரைப்படத்தின் டீசர் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.