LATEST NEWS
மாஸான மாஸ்டர் டீசர்..! “குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறிய அப்டேட்”…!!

விஜய்க்கு, விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் முதன் முறையாக நடிகை மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, கௌரி கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். மற்றும் பல யூடுயூப் நட்சத்திரங்கலும் இப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இப்படத்தின் First சிங்கிள் ‘ஒரு குட்டி ஸ்டோரி’ பாடல் வெளிவந்திருந்தது. நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று விஜய் அவர்களுக்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுக்கும் புகைப்படத்துடன் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அண்மையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இதில் பல விஷங்களை மேடையில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட இவர், இதனை தொடர்ந்து பேசும் பொழுது “மாஸ்டர் படத்தின் டீசர் ஒர்க் போய் கொண்டு இருக்கிறது” என்று மாஸான அப்டேட்டை தெரிவித்தார்.