CINEMA
ஆஹா…! என்ன விஷயமோ…. கையில் G.O.A.T மோதிரம்…. இணையத்தில் வைரலாகும் விஜய் பகிர்ந்த போட்டோ..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய். தற்போது தளபதி 69 படத்தில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை ஆனது இன்று தொடங்கியுள்ளது. இவர் சமீபத்தில் வெங்கட்ரபி இயக்கத்தில் கோட் படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் உலகம் முழுவதும் 450 கோடி வசூல் செய்துள்ளது.
இதற்கிடையில் விஜய் அரசியலில் இறங்கியுள்ளார். முதல் மாநாட்டை முன்னிட்டு இன்று விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் நடிகர் விஜய் தற்போது தன்னுடைய கையில் GOAT என்ற வாசகம் அடங்கிய மோதிரம் ஒன்றை போட்டபடி புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.