CINEMA
துப்பாக்கியும் இல்ல வாட்சும் இல்ல…. தளபதி கொடுத்த அன்பு தான் பிடிச்சிருக்கு…. செம மாஸ் காட்டிய SK…!!!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அமரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிற நிலையில் படத்தின் ஆடியோ லாங்ச் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய சிவகார்த்திகேயனிடம், தளபதி கொடுத்த கிஃப்ட்ல எது ஸ்பெஷல்? துப்பாக்கியா? வாட்சா? என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தளபதி கொடுத்த அன்புதான் ஸ்பெஷல் என்று கூறியுள்ளார்.