LATEST NEWS
சிம்புவுக்கு பதிலாக களமிறங்கும் நடிகர்.. அப்போ வெந்து தணிந்தது காடு-2 படம் எடுக்க வாய்ப்பில்லையா..? தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி முடிவு..!!

பிரபல இயக்குனரான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்தது. இதே நிறுவனம் தயாரிக்கும் கொரோனா குமார் படத்திலும் நடிக்க சிம்பு கமிட் ஆகி இருந்தார். ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும் சிம்புவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இவர்களுக்கு இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா குமார் படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் சிம்புவுக்கு பதிலாக நடிகர் விஷ்ணு விஷால் அந்த படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.
ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், தயாரிப்பு நிறுவனத்திற்கும் சிம்புவுக்கும் இடையே இருக்கும் பிரச்சனை தீர்ந்து விட்டால் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என கூறியிருந்தார். அப்படி இருக்க கொரோனா குமார் படத்தில் சிம்புவுக்கு பதிலாக விஷ்ணு விஷால் நடிப்பதால் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.