LATEST NEWS
உங்களைப் பார்க்க 24ஆம் தேதி வருகிறோம்…. ஒரே ஒரு டுவிட் போட்டு ரசிகர்களை செம குஷிப்படுத்திய நடிகை ராஸ்மிகா….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று டிசம்பர் 24ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு ஏற்பாடுகள் பலமாக நடைபெறும் நிலையில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பங்கேற்பாளர்களுக்கு நுழைவு பாஸ் வழங்கப்பட இருக்கிறது.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜயை பிரமாண்ட மேடையில் பார்ப்பதற்கு அவர் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேற்று ஒரு வீடியோவுடன் படக்குழு அறிவித்த நிலையில் அந்த வீடியோவை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து உங்களை பார்க்க 24ஆம் தேதி வருகிறோம் என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
https://twitter.com/iamRashmika/status/1605550896368205825