LATEST NEWS
என் மகன் பற்றி இது கூட எங்களுக்கு தெரியாது…. மனம் வெறுத்து பேசிய நடிகர் விஜய்யின் அம்மா…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களின் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து வாரிசு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பட குழு உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.
அவ்வகையில் தளபதி விஜயின் தாய் சோபா மற்றும் தந்தை எஸ் ஏ சி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே தாய் தந்தையை விஜய் கண்டு கொள்வதில்லை என பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், வாரிசு ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் பெற்றோர்களை துளி கூட கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் தன் மகன் குறித்து எதுவும் எங்களுக்கு தெரியாது, தற்போது நடித்து வரும் படம் மற்றும் அரசியல் குறித்து கூட தெரியாது என பத்திரிக்கையாளர்களுக்கு விஜயின் தாய் பேட்டி அளித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவ்வளவு வெறுத்திட்டு புலம்பு அளவிற்கு விஜய் பெற்றோர்களை கைவிட்டு விட்டாரே என கருத்து தெரிவித்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
பாவம் .,இந்த அம்மா வெறுத்துட்டாங்க போல, pic.twitter.com/NvrekA2iHv
— Satvik:THALA (@Satvik_AK_) December 26, 2022