Uncategorized
அம்மா வீட்டிற்கு’.. ‘சென்று ஐந்தாவது குழந்தை’.. ‘பெற்ற மனைவி’.. ‘இதனையறிந்து மனைவியை’.. “விவாகரத்து செய்த கணவன்”! ஏன் தெரியுமா?

மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை விவாகரத்து செய்ய முத்தலாக் கணவர் கூறிய நிலையில் அதை ஏற்காத மனைவி பெற்றோர்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் சம்பலை பகுதியை சேர்ந்தவர் கமீல். இவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. கமீலுக்கு மொத்தம் நான்கு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்தநிலையில் மனைவி மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து பிரசவத்துக்காக தனது தாய் வீட்டுக்கு அவர் சென்றார்.
அங்கு அவருக்கு ஐந்தாவதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் பெண் குழந்தை பிறந்ததை கேள்விப்பட்ட கமீல் கடும் கோபமடைந்தார் இதனால் மனைவி மீது விரக்த்தியடைந்த கமீல் மனைவியை விவாகரத்து செய்வதாக கூறினார்.
இதை சற்றும் எதிர்ப்பார்க்காத மனைவி குடும்பத்தாருடன் காவல் நிலையத்துக்கு சென்று கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.புகாரின் அடிப்படியில் விசாரணை மேற்கொண்டு உள்ளார்.