“இரண்டு கள்ளக்காதலர்களுடன் உல்லாசம்..” தடுத்த கணவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“இரண்டு கள்ளக்காதலர்களுடன் உல்லாசம்..” தடுத்த கணவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் காமரெட்டி பகுதியில், கள்ளக்காதலர்கள் இருவருடன் சேர்ந்து கணவனைக் கொடூரமாகக் கொலை செய்து குளத்தில் வீசிய மனைவியையும் அவரது கூட்டாளிகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காமரெட்டி பகுதியைச் சேர்ந்த காஷிராம் (26) என்பவரின் மனைவி கும்மடி சவிதா, அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். கணவர் இல்லாத நேரங்களில் இருவரையும் வீட்டிற்கு வரவழைத்துத் தனது ஆசைகளைத் தீர்த்துக் கொண்டுள்ளார். இந்த விவகாரம் கணவருக்குத் தெரியவந்ததால் தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது; இதனால் ஏற்பட்ட மனவேதனையில் காஷிராம் தொடர்ந்து மது அருந்தத் தொடங்கியுள்ளார்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட சவிதாவும் அவரது இரு கள்ளக்காதலர்களும் சேர்ந்து, கடந்த அக்டோபர் 23 அன்று காஷிராமுக்கு அதிகளவில் மதுக் கொடுத்து, மூன்று பேருமாக இணைந்து கயிற்றால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், இது தற்செயலாக நடந்த விபத்து போலக் காட்டுவதற்காக அவரது சடலத்தைக் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் வீசிச் சென்றுள்ளனர். காஷிராமின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் இது திட்டமிட்ட கொலை என்பதை உறுதி செய்து, சவிதா மற்றும் அவரது கள்ளக்காதலர்கள் இருவரையும் கம்பி எண்ண வைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in